பும்ரா, சாம்சனுக்கு 'ரெஸ்ட்' * 'சூப்பர்-4' சுற்றில்...

துபாய்: ஓமனுக்கு எதிரான போட்டியில் பும்ரா, சாம்சனுக்கு ஓய்வு கொடுக்க, கேப்டன் சூர்யகுமார் முடிவெடுத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் ('டி-20') 17வது சீசன், துபாய், அபுதாபியில் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, முதல் இரு போட்டியில் வெற்றி பெற்று, 4 புள்ளியுடன் முதல் அணியாக 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறியது. இதில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 7 ஓவர் பந்துவீசி, 3 விக்கெட் சாய்த்து, வெற்றிக்கு கைகொடுத்தார்.
இதனிடையே இந்திய அணி, 'ஏ' பிரிவில் தனது கடைசி லீக் போட்டியில் நாளை ஓமனை சந்திக்க உள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளது. இவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில், கேப்டன் சூர்யகுமார், இம்முடிவு எடுத்துள்ளார்.
சாம்சன் சோகம்
சுப்மன் கில் வருகையால் தனது துவக்க வீரர் இடத்தை இழந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், முதல் இரு போட்டியில் பங்கேற்றார். இருப்பினும், பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, ஓமனுக்கு எதிரான போட்டியில் இவருக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளது. இவருக்குப் பதில் ஜிதேஷ் சர்மா கீப்பராக களமிறங்க உள்ளார்.
ஏனெனில் அடுத்த இரண்டாவது நாள் (செப். 21), இந்திய அணி, 'சூப்பர்-4' சுற்றில் தனது முதல் போட்டியில் பங்கேற்க உள்ளது. இதற்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் வகையில் பும்ரா, சாம்சனுக்கு ஓய்வு தரப்பட உள்ளது.
வாய்ப்பு யாருக்கு
'பி' பிரிவில் இலங்கை (4 புள்ளி, ரன் ரேட் 1.546), வங்கதேசம் (4, -0.270), ஆப்கானிஸ்தான் (2, 2.150) முதல் 3 இடத்தில் உள்ளன. 3 போட்டியில் தோற்ற ஹாங்காங் (0) வெளியேறியது.
* இன்று ஆப்கானிஸ்தான் அணி, இலங்கையை வென்றால், 3 அணிகளும் தலா 4 புள்ளி பெறும்.
* அதிக ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான், இலங்கை 'சூப்பர்-4' சுற்றுக்கு செல்லும். வங்கதேசம் வெளியேறும்.
* மாறாக, இலங்கை (6) வென்றால், வங்கதேசத்துடன் (4) இணைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஆப்கானிஸ்தான் (2) வெளியேறி நேரிடும்.
மேலும்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு; ஒரு பவுன் ரூ.81,760க்கு விற்பனை
-
உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு: 6 வீடுகள் இடிந்தன: 5 பேர் மாயம்
-
பயங்கரவாத அமைப்புக்கு நிதியளிப்பவர்களிடம் விசாரணை: டிரம்ப் எச்சரிக்கை
-
போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா; அமெரிக்கா அடாவடி
-
கொலு போட்டிக்கு அழைப்பு
-
உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்