செய்திகள் சில வரிகளில்

மீன்வளத்துறை சார்பில், மீன் உற்பத்தியில் மேம்பட்ட, மீன்வளர்ப்பு நுட்பங்கள் குறித்து, 21 நாள் சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4379 என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.



தொல்குடி திட்டத்தின் கீழ், ஏ.ஐ., ஆய்வாளர், கிராபிக் டிசைனர், சி.என்.சி., ஆப்பரேட்டர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி பெற, 787 பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை அரசு தரப்பில் இலவசமாக வழங்கப்படும் என, பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement