ரூ.18 கோடி போதை பொருள் பறிமுதல்

சென்னை:எத்தியோப்பியா தலைநகர் அதிஸ் அபாபாவில் இருந்து, 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கியது.

அதில் வந்த பயணியரின் உடைமைகளை சோதனை செய்தபோது, ஒருவரின் உடைமையில், ஒரு கிலோ 800 கிராம் எடைஉள்ள, 'மெத்தா குலோன்' என்ற சிந்தடிக் வகை போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 18 கோடி ரூபாய்.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement