தேங்காய் வியாபாரி வீட்டில் 6 பவுன் நகை, பணம் திருட்டு

போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பேரூஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகணபதி, 45. தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் செல்வகணபதி வியாபாரத்திற்காக வெளியில் சென்றிருந்தார்.


அவரின் மனைவி வினிதா, 40, வீட்டை பூட்டாமல் அருகில் குழந்தைகளுடன் இருந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து, அதிலிருந்த, 6 பவுன் நகை மற்றும் 80,000 ரூபாயை திருடிச்சென்றுள்ளனர்.

வெளியே சென்ற செல்வகணபதி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில், வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரது புகார் படி,
நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement