மக்களுக்கு பொறுப்புணர்வு வேணும்: வெளிநாட்டு பயண அனுபவம் பற்றி மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

42

சென்னை: ஐரோப்பிய பயணமும், ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்ற தலைப்பில், மக்களுடன் ஸ்டாலின் செயலியில் வந்துள்ள கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பதில் அளித்தார்.

அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண அனுபவங்கள் பற்றியும் தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழகம் பற்றிய பார்வை எப்படி என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்திந்தபோது, தமிழகத்தில் கட்டமைப்பு, படித்த இளைஞர்கள், திறமை மேம்பாடு குறித்து கூறினோம். அந்நாட்டு அமைச்சர்களுடன் பேசியபோது தமிழகம் குறித்து பெருமையாக பேசினர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு, அனைத்து துறைகளும் சமமாக பகிர்ந்தளிப்பது குறித்து வியந்து பாராட்டினர்.

முதலீட்டாளர்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பமாக உள்ளனர்.

1000 ஆண்டுக்குமேல் பழமையானது ஆக்ஸ்போர் பல்கலைகழகம். இங்கு படித்து வரும் நம் மாணவர்கள், லண்டன் மற்றும் ஜெர்மனி மாணவர்களுடன் இணைந்து படித்து வருகின்றனர்.
நமது மாணவர்கள், அரசு பள்ளி, இட ஒதுக்கீட்டில் படித்து பயன் அடைந்து, உயர்கல்வியை முழு ஸ்காலர்ஷிப் உடன் இங்கு படித்து வருவதாக பெருமையுடன் கூறினர்.

இது எனக்கு மறக்க முடியாத பயணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள், பொது இடங்களில் பொறுப்புணவர்வை கடைப்பிடிப்பது போல் இங்கும் கடைபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement