மின்சாரம் தாக்கி ஒருவர் பலி மரக்காணத்தில் பரபரப்பு

மரக்காணம்: மரக்காணத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த முருக்கேரி துணை மின் நிலையத்தில், ஆள் பற்றாக்குறையால், திண்டிவனம் அருகே உள்ள ஆவணிப்பூர் கிராமத்தை சேர்ந்த ரகு,32; மரக்காணம் அருகே உள்ள கீழ்சிவிரி கிராமத்தை சேர்ந்த அய்யனார், 40; கிளியனுாரை சேர்ந்த மோகன், 30; ஆகிய மூன்று பேரை நேற்று அழைத்து சென்று, மரக்காணம் அடுத்த வடகோட்டிப்பாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்துள்ளனர்.
அப்போது திடீரென்று டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் வந்துள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் மேலே இருந்து வேலை செய்த, 3 பேரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த ரகு, சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவர் படுகாயமடைந்து, முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து தகவலறிந்த மரக்காணம் போலீசார், மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: மத்திய அரசு உதவியை நாடும் பெற்றோர்!
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை: வட மாவட்டங்களில் அதிகம்!
-
ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்
-
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் பலனளிக்காது: ரஷ்யா திட்டவட்டம்
-
ஈரானில் சாபகார் துறைமுக மேம்பாட்டு திட்டம்: தடை விதிக்க அமெரிக்கா முடிவு
-
நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்