அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு நிபுணர், 20ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் அனந்தநாராயணன், நாளை மறுநாள் (20ம் தேதி) சனிக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அதில் தலைவலி, மூளைத் தாக்கம், மயக்கம், துாக்கம் கலைதல், வலிப்பு, கிறுகிறுப்பு, தலைசுற்றல், நடப்பதில் தடுமாற்றம், பெருமூளை வாதம், பேச்சு தாமதம், மூளை காய்ச்சல், அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம், கவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறு சம்பந்தமாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.

டாக்டர் அனந்தநாராயணனை சந்தித்து ஆலோசனை பெற 0413- 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

Advertisement