ஜப்பான் அரசியலில் ஆச்சர்யம்: கட்சித் தலைவராக ஏஐ நியமனம்

5

டோக்கியோ: பல்வேறு புதுமைகள் படைக்கப்பட்டு வரும் ஜப்பானில் அடுத்த கட்ட முயற்சியாக பிராந்திய கட்சி ஒன்றின் தலைவராக ஏஐ நியமனம் செய்யப்பட்டுள்ளது. இது எப்போது முதல், எத்தனை நாட்கள் இந்தப் பதவியில் இருக்கும் என்ற தகவல் வரும் காலங்களில் முடிவு செய்யப்பட உள்ளது.

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மக்கள் நலனுக்கான சில முக்கிய திட்டங்களுக்கும் பயன்படுவது வியக்கத்தக்க வகையில் இருக்கிறது.

இந்நிலையில், ஜப்பானில் பிராந்திய கட்சிக்கு தலைவராக பென்குயின் என்ற பெயர் கொண்ட ஏஐ நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் 'Path to rebirth' என்ற பெயர் கொண்ட பிராந்திய கட்சி, சமீபத்தில் அந்நாட்டு பார்லிமென்ட் மேல்சபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டது. அதில் போட்டியிட்ட 10 இடங்களிலும் தோல்வியையே தழுவியது. அக்கட்சியின் நிறுவனரும் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதற்கு முன்னதாக மாகாண தேர்தலிலும் அக்கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.

தொடர் தோல்வி காரணமாக கட்சி தலைவராக இருந்த இஷிமரு தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவராக ஏஐ நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து அறிவிப்பை அந்த ஏஐ அமைப்பை ஆராய்ச்சி செய்து வரும் கோகி ஒகுமுரா என்ற மாணவர் வெளியிட்டார். மேலும், அந்த ஏஐக்கு அவர் உதவி செய்யப்போவதாகவும் அறிவித்தார்.

Advertisement