க்ரைம் கார்னர் : தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

கொரட்டூர்: பாடி, இளங்கோ நகரைச் சேர்ந்த தங்கபாண்டி மனைவி மகேஸ்வரி, 20. கடந்த 2014, பிப்., 14ல், வீட்டில் தனியாக இருந்த இவரை கொலை செய்து, நகைகளை திருடிச்சென்ற, மதுரை, மேலுாரைச் சேர்ந்த தினகரனை, போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தினகரன் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் தனிப்படை அமை க்கப்பட்டது.

இந்நிலையில், 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தினகரனை, தும்பைப்பட்டி பேருந்து நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.



பெண் உட்பட மூவர்

போதை வழக்கில் கைது

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருளுடன் நின்றிருந்த அயனாவரம், மேட்டு தெருவைச் சேர்ந்த முகமது ரபி, 42, என்பவரை, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், புரசைவாக்கத்தை சேரந்த ஜெயந்தி, 33, அண்ணா நகர் மணிமாறன், 31, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மூவரிடமிருந்து, எட்டு கிராம் மெத்ஆம்பெட்டமைன் போதை பொருள், ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.



வாலிபருக்கு

அரிவாள் வெட்டு

சோமங்கலம்: குன்றத் துார் அருகே சோமங்கலம், மேலத்துார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன், 30; வெல்டர். மேலாத்துார் சுடுகாடு அருகே, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த அன்பழகனை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி, தப்பிச்சென்றனர். ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement