ஆஸ்கர் விருதுக்கு ஹிந்தித் திரைப்படம் பரிந்துரை

புதுடில்லி: 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ' ஹோம்பவுண்ட் ' என்ற ஹிந்தித் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சாமுவேல் கோல்ட்வின் தியேட்டரில் வழங்கப்படும்.
இந்நிலையில் 2026 ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த சர்வதேச பட விருதுக்கு ஹோம்பவுண்ட் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
கரன் ஜோகர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் தயாரித்த இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர்கள், எடிட்டர், பத்திரிகையாளர் என 12 பேர் கொண்டு குழுவினர் இப்படத்தை பார்த்து தேர்வு செய்துள்ளனர்.
இந்தப் படம் ஏற்கனவே கேன்ஸ் 78 வது திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்
-
மகாளய அமாவாசை: புனித நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
-
அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்
-
மோடி- சரத் பவார் இடையே தொடரும் அரசியல் நட்பு
-
முன்னேற்றம் தருமா மூவர் உலா?
-
ஐ.நா. கூட்டத்தில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர்: டிரம்ப் ஆவல்