அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்

5

சென்னை: அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம், செய்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;

செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தேன்,

இதனால், சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்ததையும், பின்னர் அந்த திட்டத்தின் வீடியோ ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் தமது தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

Advertisement