ம.நீ.ம.100 ஆண்டுகள் வாழும் எனக்கு 70 வயதாகிறது: கமல்

சென்னை: ''மக்கள் நீதி மய்யம், நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும்,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
கட்சியை வலுப்படுத்த என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்கப்படுகிறது. யாரெல்லாம் அப்படி கேட்கின்றனரோ, அவர்கள் என் கட்சியில் சேர வேண்டும். அப்போது, நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது தானாகவே புரிந்து விடும்.
நூறாண்டுகள் மக்கள் நீதி மய்யம் செயல்பட வேண்டும் என்பதுதான் எனக்கான பிரதான ஆசை. நான் ஏன் ஆசைப்படக் கூடாது. தன் பிள்ளைகள், நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் ஆசைப்பட மாட்டானா? அப்படியொரு ஆசை தானே என்னுடைய கட்சியின் மீதும் எனக்கு இருக்கிறது.
கட்சியை நூறாண்டு காலம் கொண்டு செல்கிறவர்களுக்கான பொறுப்புகள் குறித்து கவலைப்படுகிறேன்; அதைத்தான், அவ்வப்போது ஞாபகப்படுத்துகிறேன். சொன்னால் ஆச்சரியப்படலாம். தற்போது எனக்கு 70 வயது ஆகிவிட்டது. மக்கள் நீதி மய்யம், நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் என்றால், யார் அதற்காக வேலை செய்ய வேண்டும். தொண்டர்களும் தலைவர்களும் தான்.
தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர். சந்தோஷமாக உள்ளது. கட்சியில், சின்ன சின்ன பிரச்னைகள் உள்ளன. அதை சரி செய்து விடுவோம் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலுக்கு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து, கூட்டணி கட்சியினருடன் பேசி முடிவெடுக்கப்படும். என் கட்சியில் இருக்கும் அனைவருமே, ஏதோ ஒரு தொழில் அல்லது வேலையில் உள்ளனர். யாருமே, 24 மணி நேர அரசியல்வாதி கிடையாது. தங்கள் வேலையை முடித்து விட்டு, கட்சிப் பணியையும் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்
-
மகாளய அமாவாசை: புனித நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
-
அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்
-
மோடி- சரத் பவார் இடையே தொடரும் அரசியல் நட்பு
-
முன்னேற்றம் தருமா மூவர் உலா?
-
ஐ.நா. கூட்டத்தில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர்: டிரம்ப் ஆவல்
Advertisement
Advertisement