வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி

புதுடில்லி: வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது. இதனால், வேளாண் பொருட்கள், குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள், ஏசி, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைகிறது.
இந்நிலையில் இன்று (செப் 22) சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நவராத்திரி பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் வலிமை, நம்பிக்கையை கொண்டு வரட்டும். நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும்.
ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும். மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கிய உறுதியை அடைய நாம் ஒன்றிணைவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பஜனை பாடலை அனுப்புங்க!
பஜனை வீடியோ ஒன்றை வெளியிட்டு, மற்றொரு பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
நவராத்திரி என்பது பக்தியை பிரதிபலிக்கிறது. இந்தநேரத்தில், பண்டிட் ஜஸ்ராஜ் ஜியின் ஆத்மார்த்தமான ஒரு பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்.
@twitter@https://x.com/narendramodi/status/1969944161554927910twitterநீங்கள் ஒரு பஜனை பாடியிருந்தால் அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைப் பாடியிருந்தால், தயவுசெய்து அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரும் நாட்களில் அவற்றில் சிலவற்றை நான் பதிவிடுவேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.









மேலும்
-
உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவோம்: பிரதமர் அழைப்பு
-
விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம்
-
எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலி: பயணத்தை ரத்து செய்த இந்தியர்களால் விமானம் தாமதம்
-
ஆவின் பொருள் விலையை குறைக்காமல் ஏமாற்று நாடகம்; அன்புமணி குற்றச்சாட்டு
-
நவராத்திரி முதல்நாள்; மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
இது பெண்களுக்கான பரிசு; 25 லட்சம் புதிய இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு