சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை: இந்தாண்டு பலி எண்ணிக்கை 249 ஆக உயர்வு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை நக்சலைட்டுகள் 249 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், நக்சலைட் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக
@twitter@twitter பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சத்தீஸ்கரில் நக்கசலைட்டுகளை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் நக்சலைட்டுகள் ஏராளமானோர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்து வருகின்றனர். என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், இந்தாண்டு பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில், இதுவரை நக்சலைட்டுகள் 249 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும்
-
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; பிரமாணப்பத்திரத்தை வாபஸ் பெற கேரள அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
-
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம்; ஓராண்டுக்கு நீட்டிப்பதாக அதிபர் புடின் அறிவிப்பு
-
பஞ்சாப் மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.1,600 கோடி நிவாரணம் போதாது: ராகுல்
-
தமிழகத்தில் 30,000 கோடி ரூபாய் மத்திய அரசு முதலீடு: நயினார் மகிழ்ச்சி
-
உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவோம்: பிரதமர் அழைப்பு
-
விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம்