மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம். இவருக்கு வயது, 65. இவர் சில தினங்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று (செப் 27) காலை அவருக்கு காய்ச்சல் அதிகமானது.


இதனால் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


உடல்நிலை சரியான பிறகு அவர் மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement