ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் விலகல்: நியூசிலாந்து 'டி-20' தொடரில் இருந்து

மெல்போர்ன்: நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் விலகினார்.
நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இன்று, மவுன்ட் மவுங்கானுயில் முதல் போட்டி நடக்கிறது. இதற்கான வலைப்பயிற்சியின் போது மிட்செல் ஓவன் அடித்த பந்து ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' மேக்ஸ்வெல் மணிக்கட்டு பகுதியில் பலமாக தாக்கியதில் காயமடைந்தார். 'ஸ்கேன்' எடுத்ததில் எலும்பு முறிவு உறுதியானது. இதனையடுத்து இத்தொடரில் இருந்து விலகிய மேக்ஸ்வெல், நாடு திரும்பினார்.
மேக்ஸ்வெலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஷ் பிலிப் தேர்வானார். 'பிக் பாஷ் லீக்' அரங்கில் 101 போட்டியில், 2453 ரன் (17 அரைசதம்) குவித்த பிலிப், இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார்.
ஏற்கனவே ஜோஷ் இங்லிஸ் காயத்தால் (காலின் பின்பகுதி) விலக அலெக்ஸ் கேரி இடம் பெற்றார்.
மேலும்
-
சிவகாசியில் கனரக வாகனங்கள் காலை மாலை நகருக்குள் வர தடை; தீபாவளி நெரிசலை தவிர்க்க காவல்துறை அறிவிப்பு
-
கட்டுமான பொருட்களுக்கு சிறந்த மானாமதுரை
-
பொய்கைக்கரைப்பட்டியில் ஸ்ரீ மஹா பெரியவா கோயில் திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்
-
உரம் பதுக்கல் விவகாரம்: அமைச்சர் ஆலோசனை
-
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திடீர் உடல்நல கோளாறு; மருத்துவமனையில் அனுமதி
-
வறட்சியான காலத்திலும் தாகம் தீர்க்கும் 'முகவை' ராமநாதபுரம் பெயரின் வரலாறு