கட்டுமான பொருட்களுக்கு சிறந்த மானாமதுரை

மண் மணக்கும் மானாமதுரையில் கட்டுமான பொருட்களான மண் மற்றும் மரம் சம்மந்தமான பொருட்கள் குறைந்த விலையிலும், தரமாகவும் கிடைப்பதால் சிவகங்கை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீடுகள் கட்டுவோர் மானாமதுரைக்கு வருகின்றனர்.
மானாமதுரை மற்றும் சுற்று பகுதிகளில் ஏராளமான செங்கல் சேம்பர்கள், காளவாசல் உள்ளன. தினமும் லட்சக்கணக்கில் செங்கல் தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.
மானாமதுரையில் ஓடும் வைகை ஆறு மற்றும் கரையோர பகுதிகளிலிருந்து கிடைக்கும் கரம்பை மண் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் இருந்து கிடைக்கும் சவடு மணல் மற்றும் ஓடை மணல் அகியவற்றை கொண்டு தரமான செங்கல் தயாரிக்கப்படுவதால் அனைத்து பகுதிகளிலிருந்தும் வீடுகள் கட்டுபவர்கள் இங்கு வந்து செங்கற்களை வாங்கி செல்கின்றனர்.
ஓடுகள், தட்டு ஓடுகள் ஆகியவற்றையும் வாங்கி செல்கின்றனர். மேலும் மானாமதுரையில் அதிகளவில் மரக்கடைகள் உள்ளதால் இங்குள்ள கடைகளில் கேரளா, பர்மா தேக்கு, ஆஸ்திரேலியா தேக்கு மரங்கள் மற்றும் ஆஸ்திரேலியா வேங்கை, வேம்பு உள்ளிட்ட மரங்களை தேவையான அளவுகளில் கிடைப்பதால் இங்கு வந்து மரங்களை வாங்கி செல்கின்றனர்.
மேலும்
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
-
தெலங்கானாவில் தேங்காய்களுக்கு இடையே மறைத்து 400 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
-
விழுப்புரம் அருகே கார் விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி; மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது சோகம்