அனுமதி கொடுத்த போலீசை விசாரிக்கணும்

@quote@ கரூரில் 41பேர் இறந்த சம்பவம், நாடு முழுதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கூட்டங்களில், இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. விஜய் தாமதமாக வந்ததால், இந்த சம்பவம் நடந்ததாக, சிகிச்சை பெற்று வருபவர்கள் கூறினர். இந்த சம்பவத்துக்கு, த.வெ.க., பொறுப்பேற்க வேண்டும். குறுகிய வேலுச்சாமிபுரத்தில், எவ்வளவு கூட்டம் வந்தால், சரியாக இருக்கும் என, காவல் துறைக்கும், உளவு துறைக்கும் தெரியும். பிறகு, எதற்கு போலீசார் அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து, விசாரிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அனைத்து கட்சிகளையும் அழைத்து, முதல்வர் கருத்து கேட்க வேண்டும். துயர சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரை கைது செய்தாலும், செய்யாவிட்டாலும் அரசியல் இருக்கும்.

- பாலபாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., -மா.கம்யூ.,quote

Advertisement