த.வெ.க., நிர்வாகிகள் கோர்ட்டில் முன்ஜாமின் மனு

மதுரை : கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.,27 இரவு த.வெ.க., பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணைச் செயலர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆனந்த் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனு:

அரசியல் காரணங்களுக்காக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவத்திற்கும்; எனக்கும் தொடர்பில்லை. போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்க தவறினர்.

எதிர்பாராத அளவு கூட்டம் கூடியது துயர சம்பவத்திற்கு காரணம். கூட்டத்தினரை கட்டுப்படுத்த அரசு இயந்திரம் தவறிவிட்டது. அதனால், முன்ஜாமினுக்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுஉள்ளார்.

இதுபோல் நிர்மல்குமார் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement