தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி

சென்னை:
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் இருவர் தகுதி பெற்றனர்.
இந்திய தடகள சங்கம் சார்பில் 40வது ஓபன் தேசிய ஜூனியர் தடகள போட்டி, ஒடிஷா வின் புவனேஸ்வரில் வரும் 10ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. இதில், நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்கும் தமிழக அணியில், சென்னையின் மலை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஸ்ரீலேகா மற்றும் இனியா தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கு முன் நடந்த தென் மாநில தடகள போட்டியில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில், ஸ்ரீலேகா வெண்கல பதக்கமும், 14 வயதுக்கு உட்பட் டோருக்கான டிரையாத்தலான் போட்டியில் இனியா வெள்ளி பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரம்
-
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்; சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்… இவர் யார் தெரியுமா?
-
கரூர் சம்பவம்: கருத்துத் திணிப்பு ஏற்படுத்த நோக்கம் என்ன; அண்ணாமலை கேள்வி
-
தொடர்ந்து அத்துமீறும் ரஷ்யா; டிரோன் சுவர் அமைக்க ஐரோப்பிய நாடுகள் திட்டம்
-
கத்தார் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி: டிரம்ப் உறுதி
-
சதம் விளாசினார் ஷ்ரேயஸ் * இந்திய 'ஏ' அணி வெற்றி
Advertisement
Advertisement