பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி

சென்னை:

'டி - 20' மகளிர் கிரிக்கெட் போட்டியில், எத்திராஜ் அணி, 40 ரன்கள் வித்தியாசத்தில், குருநானக் 'பி' அணியை தோற்கடித்தது.

குருநானக் கல்லுாரி சார்பில், பி.என்.தவான் நினைவு கோப்பைக்கான 'டி - 20' பெண்கள் கிரிக்கெட் போட்டி, வேளச்சேரியில் நடந்து வருகிறது.

நேற்று காலை நடந்த போட்டியில், எத்திராஜ் மற்றும் குருநானக் 'பி' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குருநானக் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய, எத்திராஜ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 138 ரன்களை அடித்தது.

அடுத்து விளையாடிய குருநானக் 'பி' அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 98 ரன்கள் மட்மே அடித்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிறந்த வீராங்கனையாக எத்திராஜ் அணியின் நந்தனி தேர்வானார்.

மற்றொரு போட்டியில், குருநானக் 'ஏ' அணி, 78 ரன்கள் வித்தியாசத்தில் ராணி மேரி கல்லுாரியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்கின்றன.

Advertisement