பிலிப்பைன்சுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் ஆறுதல்

புதுடில்லி: சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிலிப்பைன்சின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.9 ஆக பதிவானது. இதனால் அங்குள்ள பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பெரும் சேதம் குறித்து அறிந்து கவலையடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்த துயரமான நேரத்தில் பிலிப்பைன்சுக்கு இந்தியா துணை நிற்கும். இவ்வாறு அந்தப் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மேலும்
-
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
-
சதமடித்தார் கேஎல் ராகுல்; முதல் டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்
-
கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!
-
மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடி: காந்தி ஜெயந்தி விழாவில் பில்கேட்ஸ் புகழாரம்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
-
வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்; 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அவலம்