இன்று 3 மாவட்டம்... நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1


சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்.,2) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்; நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது வடக்கு - வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதிகளில் கோபல்பூர் மற்றும் பாராதீப்பிற்கு இடையே இன்று இரவு கரையைக் கடக்கும். இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று (அக்.,2) கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அடுத்த 6 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை விபரங்களை காணலாம்.

நாளை (அக்.,3); காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகியோ 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அக்.,4 ; திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.


அக்., 5; திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்

அக்.,6; தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அக்.,7 மற்றும் 8ம் தேதி; தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இன்று முதல் 6ம் தேதி வரையில் அரபிக்கடலில் சில குறிப்பிட்ட திசைகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement