நீதிபதியா; ஐ.ஏ.எஸ்.,சா? த.வெ.க.,வினர் குழப்பம்

வத்தலகுண்டு: தமிழக அரசை கண்டித்து, த.வெ.க.,வினர் ஒட்டிய போஸ்டரில் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசனை, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என குறிப்பிட்டிருப்பது கிண்டலுக்குள்ளாகி வருகிறது.
கரூரில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைக் கண்டித்து, தமிழக அரசுக்கு எதிராக, திண்டுக்கல் மத்திய மாவட்ட த.வெ.க., இளைஞரணி சார்பில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசனை, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என த.வெ.க.,வினர் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிபதியா, ஐ.ஏ.எஸ்., அதிகாரியா என்பது கூட தெரியாமல் த.வெ.க.,வினர் ஒட்டிய போஸ்டர்கள், மற்ற கட்சியினரால் கேலி, கிண்டலுக்குள்ளாகி வருகிறது.
மேலும்
-
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
-
சதமடித்தார் கேஎல் ராகுல்; முதல் டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்
-
கூட்டணிக்கு ஆட்சேர்க்கும் அசைன்மென்ட்: இபிஎஸ்க்கு பாஜ கொடுத்துள்ளது என்கிறார் முதல்வர்!
-
மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடி: காந்தி ஜெயந்தி விழாவில் பில்கேட்ஸ் புகழாரம்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
-
வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்; 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அவலம்