தேனியில் தி.மு.க.,கோஷ்டி பூசல் எம்.பி., பிறந்த நாள் பேனர் கிழிப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்ட தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசலால், எம். பி., தங்க தமிழ்ச்செல்வன் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன.
தி.மு.க., -எம்.பி., தங்க தமிழ்ச்செல்வனுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், தி.மு.க.,வினர் பேனர்கள் வைத்திருந்தனர்.
அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் படங்களுடன் தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் படமும் இருந்தது. இந்த பேனர்களை, நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர்.
இதனால், தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது ஆதரவு தி.மு.க., நிர்வாகி மறவபட்டி மகாராஜன் அளித்த புகாரின் பேரில், ஆண்டிப்பட்டி போலீசார், இது குறித்து விசாரிக்கின்றனர்.
இரு மாதங்களுக்கு முன், தங்க தமிழ்ச் செல்வனும், ஆண்டிப்பட்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., மகாராஜனும், அரசு விழா மேடையிலேயே ஒருவரை ஒருவர் 'முட்டாள்' என திட்டினர்.
இந்த சூழலில், தங்க தமிழ்ச்செல்வன் பிறந்த நாள் விழா பேனர்கள் கிழிக்கப்பட்டது, தி.மு.க., வில், கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளதை காட்டுவதாக அக்கட்சியினர் கூறினர்.

மேலும்
-
கரூர் சம்பவத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
ஒரே ஒரு காப்பி 60 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச விலை என கின்னஸ் சாதனை பதிவு
-
ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட் கனவு அணியில் விராட் கோலி, பிரெட் லீ, ரோட்ஸ்!
-
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
-
தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்த தீர்ப்பு: வழங்கியவர் நீதிபதி அருண் சுப்பிரமணியன்!