தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு

2


சென்னை: சென்னையில் இன்று (அக் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனை ஆகிறது.


சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று முன்தினம் (அக் 02) ஆபரண தங்கம் கிராம் 10,950 ரூபாய்க்கும், சவரன் 87,600 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று (அக் 03) காலை தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் குறைந்து, 10,840 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 880 ரூபாய் சரிவடைந்து 86,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மதியம் தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 10,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 87,200 ரூபாய்க்கு விற்பனையானது.



இந்நிலையில் இன்று (அக் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.

வெள்ளி விலை



அதேபோல், வெள்ளி விலையும் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement