என்.எல்.சி., செவிலியர் வீட்டில் 19 சவரன் நகைகள் கொள்ளை 

நெய்வேலி: நெய்வேலியில் செவிலியர் வீட்டில், 19 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி, வட்டம் 20, பாலகங்காதர திலகர் சாலையை சேர்ந்தவர் அன்பழகன். இவர், இந்திரா நகர் பகுதியில் மெடிக்கல் லேப் நடத்தி வருகிறார். இவரது மனைவி என்.எல்.சி., பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர்.

கடந்த 30ம் தேதி அன்பழகன் தனது குடும்பத்தினருடன் சென்னை சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 19 சவரன் நகைகள், 5 ஜோடி வெள்ளிக் கொலுசு, 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. திருடுபோன பொருட்களின் மதிப்பு 15 லட்ச ரூபாய் ஆகும். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement