ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்

சென்னை: தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: ஆர்எஸ்.எஸ் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதூறாக கருத்துக்களை தெரிவித்து, நூறாண்டு கண்ட சேவைக்கு இலக்கணமான உலகம் போற்றும் தலைசிறந்த மனிதநேய இயக்கத்தின் நன்மதிப்பை, பெருமையை, வரலாற்றுச் சிறப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில், அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறாக பேசிய முதல்வர் ஸ்டாலின் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
கரூர் கோர விபத்தில் 41 பேர் பலியான உயிரிழப்பு சம்பவத்தின் அரசியல் சதி குறித்து, நிர்வாக சீர்கேடுகள் குறித்து உண்மைகளை வெளிக்குணர தமிழக மக்கள் கோபத்துடன் கேள்வி கேட்பதை திசை திருப்பும் முயற்சியாக முதல்வர் ஸ்டாலின், ஆர்எஸ்எஸ் மீது பொய் பிரச்சாரம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ் பற்றி இப்போது பேசும் ஸ்டாலின், கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும். திமுகவின் தலைவர் முத்தமிழறிஞர் உங்கள் தந்தை கருணாநிதி திராவிடர் கழகம் போல் ஆர்.எஸ்.எஸ்.,சும் ஒரு சமுதாய இயக்கம் என்று தான் சொன்னார். இப்போது வயதாகி விட்டதால் இந்த வரலாறை நீங்கள் மறந்து விட்டீர்களா? தேர்தல் அரசியலுக்காக மறைத்து விட்டீர்களா? முதல்வர் அவர்களே! ஆர்.எஸ்.எஸ் ஐ அவதூறாக சித்தரிப்பது கடும் கண்டனத்துக்குரியது. சட்ட விரோதமானது.
முதல்வர் ஸ்டாலின் ஆர்.எஸ்.எஸ் மீது சுமத்திய சட்ட விரோத கொலைப்பழி பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் குறித்து அவதூறு பேசிய முதல்வர் ஸ்டாலினை முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் ஆத்மா மன்னிக்காது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.



மேலும்
-
கரூர் சம்பவத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
ஒரே ஒரு காப்பி 60 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச விலை என கின்னஸ் சாதனை பதிவு
-
ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட் கனவு அணியில் விராட் கோலி, பிரெட் லீ, ரோட்ஸ்!
-
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
-
தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்த தீர்ப்பு: வழங்கியவர் நீதிபதி அருண் சுப்பிரமணியன்!