த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
நாமக்கல்: தலைமறைவான த.வெ.க., நாமக்கல் மாவட்ட செயலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல்லில் கடந்த, 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடந்தது. அங்கு திரண்டிருந்தவர்களால், தனியார் மருத்துவமனை மற்றும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, த.வெ.க., நாமக்கல் மாவட்ட செயலர் சதீஷ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் மீது, 8 பிரிவுகளின் கீழ், நாமக்கல் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு, சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து, சதீஷ்குமார் தலைமறைவாகி உள்ளார்.
எனவே, நாமக்கல் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து, சதீஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அமலாகும் புதிய சீர்திருத்தங்கள்
-
தமிழகத்தை இருண்ட சூழலில் கொண்டு வந்து நிறுத்திய முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
-
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
-
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
-
அமைதி காக்கும் பணியில் சிறப்பு: இந்திய வீரர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு