அமைதி காக்கும் பணியில் சிறப்பு: இந்திய வீரர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு

3


அபேய்: தெற்கு சூடான் மற்றும் சூடான் இடையிலான எல்லைப் பகுதியில் இருக்கும் அபேய் நகரில் இந்திய அமைதிப்படையினர் ஆற்றியபணிக்காக ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.


சூடான் உள்நாட்டு போருக்கு பிறகு, சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையில் இருக்கும் அபேய் என்ற பகுதிக்கு சிறப்பு நிர்வாக அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தப் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை ஐநாவின் (United Nations Interim Security Force for Abyei (UNISFA)) ஏற்றுக்கொண்டுள்ளது.


Tamil News
இந்த அமைப்புக்கு இந்தியா சார்பில், அமைதிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுளளனர். அதில், கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள் அடக்கம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிக்கும் வகையில், அமைதிப்படைக்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படுகிறது என மத்திய அரசு கூறியுள்ளது.


1950 முதல் இதுவவரை இதுவரை உலகம் முழுவதும் அமைதி காக்கும் பணிகளுக்காக 2,90,000 வீரர்களை இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 180 பேர் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளனர். தற்போது 9 முதல் 11 நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 5 ஆயிரம் வீரர்கள் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் அபேய் நகரில் அமைதி காக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்தியாவை சேர்ந்த அமைதிப்படை வீரர்களை அங்கீகரித்து பாராட்டியதுடன் பதக்கம் வழங்கப்பட்டது. இதற்காக நடந்த விழாவில் UNISFA அமைப்பின் தலைவர் கமாண்டர் ராபர்ட் யாவ் அப்ரம் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டதுடன், வீரர்களை பாராட்டினார்.

Advertisement