பெண்ணின் ஆடையை கிழித்த வாலிபர் சிக்கினார்
கண்ணகி நகர்: பெண்ணின் ஆடையை கிழித்து, தகாத முறையில் நடக்க முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
கண்ணகி நகரை சேர்ந்தவர் அஜய், 22. இவர் மீது, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் கத்தியுடன் சுற்றிய இவர், பெண்கள், குழந்தைகளை மிரட்டியுள்ளார்.
அப்போது, அவரது நடவடிக்கையை தட்டிக்கேட்ட, 25 வயது பெண்ணின் கையை பிடித்து இழுத்து, ஆபாசமாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, கத்தியால் பெண்ணின் ஆடையை கிழித்து, தகாத முறையில் நடக்க முயன்றார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், அவரை பிடித்து நையப்புடைத்து, கண்ணகி நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பஞ்ச துவாரகா' சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
-
ரயில் நிலையத்தில் 3 சிறுவர்கள் மீட்பு
-
'புகையிலை இல்லாத பகுதி' பள்ளிகள் அருகே எல்லைக்கோடு
-
பிரசன்ன வரதராஜர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
-
கூட்டணி குறித்து அன்புமணி விரைவில் அறிவிப்பார்: ஒருங்கிணைப்பாளர் தகவல்
Advertisement
Advertisement