பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், 86. இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு ராமதாசுக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் டாக்டர்கள் பரிந்துரையின் பேரில், ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி வந்து இருந்தார்.


மேலும் இரண்டு நாட்களுக்கு ராமதாஸ் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்கிற மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றப்படி பயப்படுவதற்கு ஏதுமில்லை என்று டாக்டர்கள் சொல்லி உள்ளனர். ஐசியுவில் ராமதாஸ் இருப்பதால் நேரில் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார். டாக்டர்களிடம் நான் பேசி உள்ளேன். 6 மணி நேரத்தில் ராமதாஸ் ஐசியுவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டாலின், இபிஎஸ் நலம் விசாரிப்பு
இன்று மதியம் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு மாலையில், ராமதாசை நேரில் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.
வாசகர் கருத்து (4)
Ramachandran J - Chennai,இந்தியா
06 அக்,2025 - 16:40 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
06 அக்,2025 - 14:09 Report Abuse

0
0
Reply
Vasan - ,இந்தியா
06 அக்,2025 - 11:53 Report Abuse

0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
06 அக்,2025 - 10:41 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement