பிரமோத் பகத் 'ஹாட்ரிக்' தங்கம்: சர்வதேச பாரா பாட்மின்டனில்

அபியா: நைஜீரியாவில் நடந்த சர்வதேச பாரா பாட்மின்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.
நைஜீரியாவின் அபியா நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் முதல் சீசன் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('எஸ்.எல்.3') பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-7, 9-21, 21-9 என சகவீரர் மந்து குமாரை வீழ்த்தி, தங்கம் வென்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு ('எஸ்.எல்.3-4') பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-13, 21-18 என நைஜீரியாவின் ஒபின்னா பிரிசியஸ், சிகோஜி ஜெரிமியா ஜோடியை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றியது.
கலப்பு இரட்டையர் பிரிவு ('எஸ்.எல்.3' - 'எஸ்.யு.5') பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், ஆரத்தி பாட்டீல் ஜோடி 21-13, 21-17 என பெருவின் கெர்சன் லாஸ்டானால், டயானா ரோஜஸ் கோலக் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன்மூலம் பிரமோத் பகத் 37, 'ஹாட்ரிக்' தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் ரஞ்சித் சிங், மூன்று வெண்கலம் வென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என, 27 பதக்கம் கிடைத்தன.
மேலும்
-
அமைச்சர் சிவராஜ் தங்கடகி, எம்.பி., ராஜசேகர ஹிட்னால்... துரோகிகள்!: காங்., 'மாஜி' அமைச்சர் இக்பால் அன்சாரி ஆவேசம்
-
மொபைல் டவர் நிறுவ போராட்டம் ஜாதிவாரி சர்வே புறக்கணிப்பு
-
முதல்வருக்கு ரூ.70 லட்சத்தில் புதிய மின்சார சொகுசு கார்
-
காரை 'ரிவர்ஸ்' எடுத்தபோது 11 மாத ஆண் குழந்தை பலி
-
காய்ந்த மரங்களை அகற்றுவதில் சிக்கல்
-
பெண் குழந்தை பிறந்ததால் சித்ரவதை மனைவி தற்கொலை; கணவர் மீது புகார்