மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு

6

ஸ்டாக்ஹோம்: உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.


Tamil News
1brஉலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.


இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது. முதல்நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது.


இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துவது பற்றிய ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்,

இயற்பியல் - அக்.,7

வேதியியல் - அக்.,8

இலக்கியம் - அக்.,9

அமைதி - அக்.,10

பொருளாதாரம் - அக்., 13

நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி வழங்கப்பட இருக்கிறது.

எதிர்பார்ப்பு



இஸ்ரேல் - ஹமாஸ், இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தியதால், அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுள்ளார். எனவே, அக்.,10ம் தேதி அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement