கவாய் மீதான தாக்குதல் இந்தியரை கோபப்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி

10


புதுடில்லி: '' சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைமை நீதிபதி கவாயிடம் பேசினேன். சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டனத்திற்குரியது.


இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்ட போது நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். இது நீதியின் மாண்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement