இந்தோனேஷியாவில் பள்ளி கட்டடம் இடிந்த சம்பவத்தால் தொடரும் துயரம்: பலி 61 ஆக உயர்வு

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேஷியாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோவார்ஜோ நகரில் அல் கோசினி என்ற முஸ்லிம் பள்ளி இயங்கி வருகிறது. சமீபத்தில், அந்த வளாகத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடு பட்டிருந்தபோது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதைந்தனர்.
இவ்விபத்தில் இதுவரை மாணவர்கள் 61 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலானோர், 12 முதல் 19 வயதுக்குட்பட்டோர். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

மேலும்
-
பீஹார் தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளர்கள்; நாளை கூடுகிறது காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு
-
கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
இப்போது நான் பேசுவதை வைத்துக்கூட அரசியல் பண்ணலாம்: சொல்கிறார் கமல்
-
மக்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி: பழைய நினைவுகளை பகிர்ந்தார் மோடி
-
ஓராண்டு கழித்து கெஜ்ரிவாலுக்கு அரசு இல்லம்: மத்திய அரசு ஒதுக்கீடு
-
உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்