கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: கோவை அவிநாசி சாலையில் ரூ. 1791 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட மேம்பாலத்துக்கு விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 2020ல் அறிவிக்கப்பட்டு, 2021ம் ஆண்டு மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை மேம்பாலத்தை திமுக அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், ஜிடிநாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாலத்தின் சிறப்புகள் என்ன?
பாலத்தின் மொத்த நீளம்- 10,100 மீ
மேம்பாலத்தின் திட்ட மதிப்பீடு- ரூ.1,791 கோடி
மொத்த அகலம்- 17.25 மீ
தூண்கள் எண்ணிக்கை- 305
போர் வெல் எண்ணிக்கை- 120
மின் விளக்குகளின் எண்ணிக்கை- 610
சிவல் இன்ஜினியர்கள்- 100 பேர்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள்- 50 பேர்
தாங்கும் திறன்- 6,100 டன்.










மேலும்
-
இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிப்பு
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கைது
-
இன்று 13 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
-
டிஜிட்டல் இந்தியாவின் புதிய சாதனை; கத்தாரில் யுபிஐ சேவையை தொடங்கி வைத்தார் பியூஷ் கோயல்!
-
நான் உங்களுடன் இருக்கிறேன்; கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ அழைப்பில் விஜய் ஆறுதல்
-
கொழும்பு-சென்னை ஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை: விமான சேவை ரத்து