நீதிபதிகளின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: கவாய் கவலை

புதுடில்லி: நீதிமன்றங்களில் நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், தன் காலில் அணிந்து இருந்த காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி எறிய முயன்றார். அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து வெளியே இழுத்துச் சென்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜாவேரி கோயிலில் எழு அடி உயர சிலையை புனரமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய், 'விஷ்ணு மீது உண்மையிலேயே பக்தி இருந்தால், சிலையை சீர்படுத்தக் கோரி, அவரிடமே பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். 'சிலையை சீர்படுத்தும் அதிகாரம் தொல்லியல் துறையிடம் தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திடம் இல்லை' என கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அனைத்து மதத்தின் மீதும் தனக்கு மரியாதை இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடனடியாக விளக்கமும் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நபர், தலைமை நீதிபதியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி கவாய் பேசும் போது, வழக்கு விசாரணையின் போது வாய்மொழியாக கூறும் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது என கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: வழக்கு ஒன்றின் விசாரணையின் போது எனது அன்புக்குரிய சகோதர் நீதிபதி வினோத் சந்திரன் சில கருத்துகளை கூற முயன்றார். அதனை கூறுவதற்கு முன்னர் நான் தடுத்து நிறுத்தினேன். இல்லையென்றால், சமூக ஊடகங்களில் என்ன மாதிரியாக அந்த கருத்துகள் பகிரப்படும் என நமக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.









மேலும்
-
யுபிஐ அப்டேட்: பணம் அனுப்புவதை எளிதாக்க புது வசதி!
-
சவாலான நேரத்தில் வீரர்களின் வரலாற்று சாதனை: ஆண்டு வாரியாக விளக்கிய விமானப்படை தளபதி
-
டில்லி-கொல்கத்தா சாலையில் 20 கி.மீ. டிராபிக் ஜாம்; 4 நாட்களாக காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு; ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்
-
இன்று இனிதாக... பெங்களூரு
-
பெங்களூரின் 5 மாவட்டங்களுக்கு காங்., தலைவர்கள் நியமனம்