காசாவில் நடக்கும் பயங்கரத்தை முடிவுக்குக் கொண்டு வரணும்: சசி தரூர்

புதுடில்லி: இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையேயான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததைக் குறிக்கும் வகையில், தெற்கு இஸ்ரேலில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்றுக்கூடி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். எகிப்தில், இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், 2ம் ஆண்டு நிறைவை ஒட்டி, காங்கிரஸ் எம்பி சசி தரூர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து காசா மீதான கொடூரமான தாக்குதலுக்கும் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.


இழந்த அனைத்து உயிர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மேலும், இந்த பயங்கரத்தை மிக விரைவில் கொண்டு வர வேண்டும் என்பது எனது மனமார்ந்த ஆசை. இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.

Advertisement