பூக்கள் விலை கடும் சரிவு சாலையில் வீசிய விவசாயிகள்

பங்கார்பேட்டை: பூக்களின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவால், வியாபாரிகள், பூக்களை சாலைகளில் கொட்டி விட்டு சென்றனர்.
பண்டிகைகள் முடிவடைந்து விட்டதால், பூக்களை கேட்பவர்கள் இல்லை. பூக்களை பறிக்கும் செலவு, போக்குவரத்து செலவு, கட்டுப்படியாகாமல் போய்விட்டது. பூக்களை வளர்க்கும் விவசாயிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்த பூக்களை சாலைகளில் கொட்டினர்.
ஒரு கிலோ சாமந்திப் பூ விலை 10 ரூபாய்; செண்டு மல்லி 10 முதல் 20 ரூபாய்; இன்னும் சில வகை பூக்கள் 10 ரூபாய்க்குள் தான் கிடைக்கிறது. 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஜா, 100 ரூபாயை தாண்டவில்லை.
ஒரு ஏக்கர் நிலத்தில் சாமந்தி பூக்களை வளர்க்க, விதைகள் நாற்றுகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து, கூலி, போக்குவரத்து செலவு என 1,000 ரூபாய்க்கும் அதிகமான ரூபாய் செலவு ஏற்பட்டும் தற்போதைய விலையில், பூக்களை பறிக்க கூட பணம் கிடைக்கவில்லையே என்று விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.
மேலும்
-
தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் விருது
-
போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியிடம் தவெக மனு
-
யுபிஐ அப்டேட்: பணம் அனுப்புவதை எளிதாக்க புது வசதி!
-
சவாலான நேரத்தில் வீரர்களின் வரலாற்று சாதனை: ஆண்டு வாரியாக விளக்கிய விமானப்படை தளபதி