குட்கா கடத்திய புதுச்சேரி ஆசாமிக்கு 'குண்டாஸ்'

கடலுார்:தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய புதுச்சேரி ஆசாமி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக, காரில், 183 கிலோ குட்கா பொருட்கள் கடத்திச் சென்ற, புதுச்சேரி, குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் சரவணன்,38, என்பவரை, கடலுார் புதுநகர் போலீசார் கடந்த செப்., 8ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சரவணன் மீது கடலுார் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் 2 குட்கா வழக்குகளும், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒரு குட்கா வழக்கும் உள்ளது.

இவரின் குற்றச்செயலை தடுக்கும்பொருட்டு, எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரைப்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள சரவணன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Advertisement