சிறப்பு முகாம்

மதுரை : மதுரை மாநகராட்சியில் 19, 77, 96, 99 ஆகிய வார்டுகளுக்கு கூடல்புதுார் ஐஸ்வர்யம் மகால், சுப்பிரமணியபுரம் கற்பகவேல் மகால், திருப்பரங்குன்றம் நகரத்தார் திருமண மண்டபம் ஆகியவற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடந்தன.

மேயர் இந்திராணி துவக்கி வைத்தார். ஆதார் அட்டையில் திருத்தம், பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முகாமில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. துணைமேயர் நாகராஜன், உதவி கமிஷனர்கள் பிரபாகரன், ராதா, மணியன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், சுகாதார அலுவலர் திருமால், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Advertisement