செயல்படாத குடிநீர் மையம் சுற்றுலா பயணியர் தவிப்பு

மெரினா, சுற்றுலா தலமான மெரினா கடற்கரையில், ஆங்காங்கே அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் செயல்படாமல் வீணாகி வருகின்றன.
சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு, உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
அவர்களின் வசதிக்காக, நான்கு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்து செயல்படாமல் முடங்கியுள்ளன.
இதனால் பயணியர், வேறு வழியின்றி அங்குள்ள கடைகளில் காசு கொடுத்து தரமற்ற குடிநீரை வாங்கி பருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மணற்பரப்பில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனால், சுகாதார துறையினர் யாரும் கடைகளில் ஆய்வு மேற்கொள்வதில்லை' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement