போதை மாத்திரை விற்பனை கடலுாரில் 2 பேர் கைது

கடலுார்:கடலுாரில் போதை மாத்திரை விற்பனை செய்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் டி.எஸ்.பி.,ரூபன்குமார் மற்றும் போலீசார் நேற்று கடலுார் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக கையில் பார்சலுடன் நின்றிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் கடலுார் முதுநகரைச் சேர்ந்த தாஸ் மகன் அரவிந்த்,19, ராமு மகன் கோகுல்,22, என்பதும், புனேவிலிருந்து வலி நிவாரணி மாத்திரைகளை கூரியரில் வரவழைத்து, அதை போதைக்காக பயன்படுத்தியதும், அந்த மாத்திரைகளை கூடுதல் வி லைக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.

அவர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து அரவிந்த், கோகுல் இருவரையும் கைது செய்தனர். மேலும், வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும், மாத்திரைகள் வேறு எங்கிருந்து வரவழைக்கப்படுகிறது குறித்தும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement