கல்லுாரித் தலைவரை பாராட்டிய கவர்னர் ரவி

மதுரை : தேசியக் கல்வி தரவரிசை நிறுவனத்தின் (என்.ஐ.ஆர்.எப்.) 2025க்கான தரவரிசை பட்டியலில் மதுரை தியாகராஜர் கல்லுாரி 20வது இடம் பெற்றதை கவர்னர் ரவி பாராட்டினார்.

சென்னை ராஜ்பவனில் நடந்த உயர்கல்வி மாநாட்டில் கல்லுாரித் தலைவர் உமாகண்ணன், முதல்வர் பாண்டியராஜாவை கவர்னர் ரவி பாராட்டினார்.

உமாகண்ணன் கூறுகையில், ''கடந்த மூன்று ஆண்டுகளாக தரவரிசை பட்டியலில் முதல் 20 இடங்களைப் பெற்று வருகிறது தியாகராஜர் கல்லுாரி. கல்வித்திறன், ஆராய்ச்சி மேம்பாடு, புதுமையான முயற்சியுடன் நிறுவன வளர்ச்சிக்கு பாடு படுகிறோம்.

மேலும் நாக் ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம், ஐ.ஐ.சி., விருதுகளில் இரட்டை நட்சத்திர மதிப்பீடு பெற்று கல்வி மேம்பாட்டுப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக விளங்குகிறோம்'' என்றார். டீன் பிரகாஷ், வேதியியல் துறைத்தலைவர் சாயிகண்ணன், தாவரவியல், பயோடெக் துறை உதவி பேராசிரியர்கள் விஜி, ரேணுகாதேவி உடனிருந்தனர்.

Advertisement