தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 30 பேர் உள்பட 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல, இலங்கையின் நெடுந்தீவு மேற்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 17 பேரையும் நேற்றிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மொத்தம் 47 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09 அக்,2025 - 09:21 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
-
மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு
-
கோவையில் புத்தொழில் மாநாடு துவக்கம்; 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
-
இந்தியா வந்தார் ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி
-
பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி கத்தியால் குத்திக்கொலை; கணவன் கைது
-
காசா போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு
Advertisement
Advertisement