மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு

மும்பை: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று (அக் 08) கேர் ஸ்டார்மர் வந்தார். அவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை துவங்கியுள்ளார். அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலை., துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (அக்., 09) மும்பையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.



மேலும்
-
மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் வணிக ஆய்வாளர் கைது
-
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் உறுதி
-
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு
-
தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்வி; கேட்கிறார் சிதம்பரம்
-
கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு