உலக விளையாட்டு செய்திகள்

சபாஷ் சபலென்கா
உஹான்: சீனாவில் நடக்கும் உஹான் ஓபன் டென்னிஸ் 'ரவுண்டு-16' போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-3, 6-2 என ரஷ்யாவின் லியுட்மிலா சம்சோனோவாவை வீழ்த்தினார். இத்தொடரில் 'ஹாட்ரிக்' பட்டம் (2018, 2019, 2024) வென்ற சபலென்கா, தொடர்ச்சியாக 19வது வெற்றியை பதிவு செய்தார்.


காலிறுதியில் அர்ஜென்டினா
சான்டியாகோ: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன் நடக்கிறது. 'ரவுண்டு-16' போட்டியில் அர்ஜென்டினா அணி 4-0 என, நைஜீரியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் கொலம்பியா அணி 3-1 என, தென் ஆப்ரிக்காவை வென்றது.


ரோமா அணி ஏமாற்றம்
மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), ரோமா (இத்தாலி) அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


ஜோகோவிச் ஜோர்

ஷாங்காய்: சீனாவில் நடக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெல்ஜியத்தின் ஜிஸோ பெர்க்ஸ் மோதினர். இதில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.


எக்ஸ்டிராஸ்

* ஆமதாபாத்தில் நடக்கும் ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப், 'வாட்டர் போலோ' காலிறுதியில் இந்திய பெண்கள் அணி 6-34 என சீனாவிடம் தோல்வியடைந்தது.


* மும்பை கிரிக்கெட் சங்க தேர்தல், வரும் நவ. 12ல் நடக்கவுள்ளது.


* கிரீசில் இன்று துவங்கும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் ('ஷாட்கன்') தொடரில் இந்தியா சார்பில் மைராஜ் அகமது கான், அனந்த்ஜீத் சிங், ரைசா தில்லான் உள்ளிட்ட 6 பேர் பங்கேற்கின்றனர்.


* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 2025-26 சீசனக்கான கேரளா அணியில், ஸ்பெயினின் ஜுவான் ரோட்ரிக்ஸ் மார்டினெஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


* கொழும்புவில் நடக்கவுள்ள ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் சீரிஸ் தொடருக்கான (அக். 18-19) இந்திய பெண்கள் அணி கேப்டனாக ஷிகா யாதவ் நியமிக்கப்பட்டார். இந்த அணியில் அமன்தீப் கவுர், சந்தியா ராய், சந்தியாராணி, ஆர்த்தி குமாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement