திருமாவளவன் வாகனம் மோதல் விவகாரம் அண்ணாமலை கேள்வி
சென்னை: ''தமிழகத்தில் எல்லாரும், எந்த இடத்திற்கும் செல்ல உரிமை உள்ளது,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
கரூர் செல்ல, த.வெ.க., தலைவர் விஜய் அனுமதி பெற தேவை இல்லை. தமிழகத்தில் எல்லாரும், எந்த இடத்திற்கு செல்லவும் உரிமை உள்ளது. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பை, போலீசார் தான் வழங்க வேண்டும். அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி தொடர்பாக, பழனிசாமி பேசியது குறித்து, நான் எதுவும் கூற விரும்பவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது; பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
திருமாவளவன் வாகனம் மீது மோதியவரை, வி.சி., தொண்டர்கள் தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொது இடத்தில் ஒருவரை அடிக்கலாமா? வாகனத்தை உடைக்கலாமா. இந்த பிரச்னையில், ஒரு வழக்கு கூட பதிவு செய்யாதது ஏன்? கூட்டணி கட்சியினர் தவறு செய்யும்போது, நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வர் ஸ்டாலின் மீது மக்களுக்கு எப்படி மரியாதை வரும்?
திருமாவளவன் ஏன் பதறுகிறார் என தெரியவில்லை. ஏன், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து அனுப்பினார்; எதற்காக இன்று வரை அவருடன் நட்பு பாராட்டி கொண்டிருக்கிறார். ஆதவ், விஜய் கட்சியில் சேர்ந்த பின், திருமாவளவனிடம் ஆசிர்வாதம் வாங்கினார். பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டுவது போல், அனைத்தையும் பா.ஜ., உடன் தொடர்புபடுத்தி பேசுவேன் என திருமாவளவன் பேசுகிறார்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
மேலும்
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,380 சரிவு; ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை
-
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டரில் 7.6 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்க்கும் உலக நாடுகள்
-
வடமாநில தொழிலாளி கொலை? நண்பரிடம் தீவிர விசாரணை
-
வண்ண மீன் வர்த்தக மையம்; நாளை திறக்கிறார் முதல்வர்