டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர்; அடித்து சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்பைப் பாராட்டினார். அவர், "அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர்" என்று கூறினார்.
அமைதிக்கான நோபல் பரிசு நாளை அக்டோபர் 10ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நார்வே நாட்டைச்சேர்ந்த ஆஸ்லோ அமைதி ஆய்வு நிறுவனம் யாருக்கு பரிசு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெறுகிறது. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
'இதுவரை ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். எனக்கு கட்டாயம் நோபல் பரிசு தர வேண்டும்' என்கிறார் அவர். 'எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்' என வெளிப்படையாக பேசியிருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுங்கள். அவர் அதற்கு தகுதியானவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிரம்புக்கு கிடைக்குமா?
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர் பெயர் நாளை அக்டோபர் 10ம் தேதி அறிவிக்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது, தனக்கு பரிசு கிடைக்காவிட்டால் டிரம்ப் எப்படி அந்த செய்தியை எதிர்கொள்வார் என்று உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் விடை நாளை மதியம் 3 மணிக்கு தெரிந்து விடும்.
மேலும்
-
திருமாவளவன் வாகனம் மோதல் விவகாரம் அண்ணாமலை கேள்வி
-
அ.தி.மு.க., பிரமுகருக்கு மீண்டும் சம்மன்
-
லோக்சபா தேர்தல் வழக்கு கோர்ட்டில் பன்னீர் ஆஜர்
-
த.வெ.க., -- -மா.செ., மதியழகனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
-
பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்., தலைவர்கள் செல்வர் அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு
-
அ.தி.மு.க., பிரசாரத்தில் த.வெ.க., கொடி 'பிள்ளையார் சுழி' என பழனிசாமி பெருமிதம்